திருவள்ளுவரின் திருக்குறள்
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.இதில் நட்பை பற்றி மிக அழகாக கூறியுள்ளார்.மேலும்,நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு,கூடாநட்பு என்று பிரித்துகாட்டியுள்ளார்.மேலும், இங்கே சில குறல்கள் இணைக்கப்பட்டுள்ளார். நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. விளக்கம் 1: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். விளக்கம் 2: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும். முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. விளக்கம் 1: முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். விளக்கம் 2: பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் ப...
migavum nalla kavithai. kavithaikku eerraarpool nadanthu kollavum
ReplyDelete